தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானம் 'டீ' எனப்படும் தேநீர்.
'கேமில்லா சினன்சிஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டுதோறும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடி சாறே தேநீர் ஆகும்.
தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் மாறுபடும்போது டீ பலவகையாக வகைப் படுத்தப் படுகிறது. ஒய்ட் டீ,மஞ்சள் டீ,கறுப்பு டீ,கிரீன் டீ என வகைப்படுத்தப் படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய 'பாலிபீனால்கள்' சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
கிரீன் டீயில் உள்ள வேதிப் பொருட்களின் பெயர்கள் நமக்குத் தேவையில்லையென்றாலும் இங்கே குறிப்பிடுகிறேன்.
கிரீன் டீயில் எபிகேடசின்,எபிகேடசின் -3-கேலேட், எபிகேலோகேடசின்,எபிகேலோ கேடசின் -3-கேலேட்ஆகியவற்றோடுஃபுளூரைடுகள்,மாங்கனீசு,பொட்டாசியம்,
அரோடினாய்ட்ஸ்,காஃபின்,தெயோப்ஃலின்,தெயோஃபிளேவின்போன்ற சேர்மங்கள் உள்ளன.
உடலுக்குத் தேவையான 'ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்' கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது.வைட்டமின் 'சி' யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் 'ஈ' யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கிரீன் டீ எந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்டது என்பதை பாருங்கள்.
கேன்சர்:
கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு:
கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது 'இன்சுலீனின்'செயல்பாட்டையும்'அதிகரிக்கிறது.
இதயம்:
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்:
ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டாம்.
ஒபிஸிட்டி:
உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.
முதுமை:
வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுக்கலாமே.உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப் படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.
பல்:
கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு:
கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறதாம்.
பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.
வணக்கம்,நான் கடந்த நான்கு மாதங்களாக கிரீன் டீ குடித்து வருகிறேன்.நன்றாக உள்ளது.தங்களின் கட்டுரை என் ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது. நண்பர்களுக்கு பரிந்துரை செய்ய போதுமான தகவல்கள் எழுதியதற்கு நன்றி. தொடர்ந்து எழுதவும்.
ReplyDeleteமதுரையிலிருந்து ஜெரி ஈசானந்தா
கீரின் டீ குடிச்சா கொஞ்சம் உடல் எடை குறையும் சொன்னதை வைச்சு முன்னாடி டிரை செஞ்சேன் அப்புறம் அப்படியே விட்டுட்டேன் ! லிஸ்டை பார்த்தா ஏகப்பட்ட நல்ல விசயங்கள் இருக்கும் போல கீரின் டீ குடிக்கிறதால...!
ReplyDeleteநன்றி :)
நன்றி திரு.ஜெரி ஈசானந்தா ,ஆயில்யன்.
ReplyDeleteகிரீன் டீயை அநேகமாக எல்லா டாக்டர்களுமே பரிந்துரைக்கிறார்கள்.
good thanks for this information
ReplyDeleteRomba nalla tips
ReplyDeleteRomba nalla tips
ReplyDelete