Wednesday, December 27, 2006

கனவின் வண்ணங்கள் நூறு

சமீபகாலமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'அஞ்சலி' என்ற தொடரின் 'டைட்டில்' பாடல்வரிகள் இவை.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பது:
"எப்போதும் கனவின் வண்ணம்
கருப்பு வெள்ளைதான்
கனவுக்கு நிறங்கள் இல்லைதான்
நான்காணும் கனவு மட்டும் ஏழு வண்ணம்தான்
சமயத்தில் நூறு வண்ணம்தான்''
நான் மிகவும் ரசித்துக்குக் கேட்கும் வரிகள்.எத்தனை அர்த்தப் பொதிவுகள்.வாழ்க்கையே நம் கனவுகளில் தானே மையம்கொண்டிருக்கிறது.நேற்றைய கனவு இன்று பொய்த்துப்போனாலும் நாம் நாளைய கனவில் மிதந்து கொண்டுதான் இருக்கிறோம்.
கனவுகள் நம் இலட்சியத்தின் கதவுகள் என்றால் ந்ம் முயற்சிகள் தான் அதன் திறவு கோல்.அதனால் தான் நம் குடியரசு தலைவர்கூட இளைஞர்களை கனவு காணச் சொன்னார்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் தேர்வு தோல்விகளுக்கும்,காதல் தோல்விகளுக்கும் தம் வாழ்வை பணயம் வைக்கிறார்கள்.
தங்க மெடல் வாங்கி படிப்பில் முதலிடம் வந்தவர்கள் அரசாங்க பதவியில் கீழ்நிலையிலும்,தோற்று பின் ஜெயித்தவன் அதைவிட உயர்ந்த பொறுப்பிலும் இருக்கும் பல சாட்சியங்கள் என்னிடம் உண்டு.ஏன் நீங்களே கூட அறிந்திருக்கலாம்.
குடும்ப பிரச்சினைகள்,காதல் தோல்விகளை எதிர் கொள்ள முடியாமல் மாண்டுபோவோர் எண்ணிக்கை அதிகரித்திக் கொண்டேதான் இருக்கிறது.
தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான்.சறுக்கியவன் மீண்டும் எழுவதும் நடப்பதும் தானே நியதி.தோல்வியைக் கண்டு துவளாமல் எங்கு தவறினோம் என்பதை நேர் செய்தால் அடுத்து வெற்றி மேல் வெற்றிதான்.
கனவுகள் காண்போம் அது ந்னவாகும் வரை.......

2 comments:

  1. உங்க கனவு கருப்பு வெள்ளையா?ஈஸ்ட்மென் கலராங்கோ?

    ReplyDelete
  2. பெயர் தெரியா நண்பருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க்கையே வண்ணக்கனவுதானே.அது நிறம் மாறுவதும் பொலிவு பெறுவதும் நம்மிடம்தான் உள்ளது

    ReplyDelete