Tuesday, December 19, 2006

பதக்கப் பறிப்பின் பின்னணி....

இரண்டு நாட்களாக மனதை குடைந்த கேள்விக்கு இன்று விடை தேடிக் கண்டுபிடித்தேன்.
பாலினப் பிரச்சினையில் சாந்தியின் பதக்கம் பறிப்பு என்றதும் தாங்க முடியாத கோபம்தான் வந்தது.
ஒருவர் ஆணோ,பெண்ணோ அது தீர்மானிக்கப் படுவது பிறப்பின் மூலம் தானே இதில் சாந்தியின் தவறென்ன என்று ஆராய முனைந்தேன்.
ஒலிம்பிக் விளையாட்டுக்ளில் பெண்கள் பங்கேற்க தொடங்கிய காலத்திலிருந்தே இந்த 'பாலின தெரிவு சோதனை"யும் தொடங்கி விட்டது
பெண்கள் மட்டுமே பங்கு பெறும் விளையாட்டுகளில்,கள்ளத் தனமாக பெண் போல் நுழைந்து வாகை சூடும் தந்திரத்தை ஆண்கள் கையாண்டதே இந்த 'சோதனை' உருவாக கருவாக அமைந்தது.
1912 மற்றும்1936 களில் பேசப் பட்டாலும் முதன் முதலில் 1966 ல் தான் தீவிரமடைந்தது.
அந்த கால கட்டத்தில் மிகவும் மோசமான நடைமுறைகள் கையாளப் பட்டது.
பெண் மருத்துவ வல்லுனர்கள் முன்பாக நிர்வாண அணிவகுப்பு முறை அத்துடன் நேரிடையாக பிறப்புறுப்பை பரிசோதித்தல்
பின்னாளில் இம்முறைகள் கைவிடப் பட்டு,1968 ல் நடைபெற்ற மெக்சிகோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிவியல் பூர்வமான சோதனை நடத்தப் பட்டது.
வாயின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை [sample tissues taken from the inner layers of the cheeks]பரிசோதனை முறை
[Buccal smear test] அமுல் படுத்தப் பட்டது.பாலூட்டிகள்[MAMMALS] அனைத்தும்
[மனிதன் ஒரு பாலூட்டி வகை நன்பதை கருத்தில் கொள்க]
குரோமசோம் அடிப்படையிலேயே ஆண்,பெண் என்று வகைப்படுத்தப் படுகின்றன.
XX வகை குரோமசோம் பெண்ணுக்கென்றும்
XYவகை குரோமசோம் ஆணுக்கென்றும் உள்ளது.
இதில்'பெண்மை' பரிசோதனைக்கு உட்படும் வீராங்கனைகள் Y வகை கொண்டிருந்தால் ஆண் தன்மையுடையவர்களாக கருதப் படுகிறனர்.70,80களில் இது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வந்தது.ஏனெனில் இது ஒரு 'ந்ம்பிக்கைக்குகந்த' சோதனையாக கருத முடியாத நிலை.பிறப்பிலேயே இந்த 'குரோமசோம்கள் [மரபணுக்கள்] குறைபாடு உள்ளவர்கள் இந்த சோதனை முடிவில் ஆணாக[பாலின தோல்வி] கருதப்படும் வாய்ப்பு அதிகம் கொடுமை என்னவென்றால்,ஒரு பெண் பாலின் சோதனையில் தோற்றால்[ Y வகை கொண்டிருந்தால்]மொத்தமாக போட்டியிலும் தோல்வி
ஆனால் ஒரு ஆண் பாலின சோதனையில் தோற்றாலும் போட்டியில் தோல்வி இல்லை.
1991 வரை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மகளிர் தங்கள் புகைப்படத்துடன் IOC யால் பரிந்துரை செய்யப்பட்ட பாலின தெரிவு சோதனைக்கான அட்டை சமர்ப்பித்தல் வேண்டியிருந்தது.
இந்த BUCCAL SMEAR நம்பகமானது இல்லை என்று கருதப் பட்டதால்,1992 பார்சிலோனாவில் ந்டைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்,நுட்பமான ஒரு அறிவியல் முறை செயல்படுத்தப் பட்டது.
POLYMERASE CHAIN REACTION [PCR] எனப்படும் Y குரோமோசோம்களில் உள்ள DNA பற்றி ஆராயும் ஒரு மரபணு சோதனை நடத்தப் பட்டது.தலைமுடியின் உரோமக்கால்களில் சுரக்கும் ஒருவித சுரப்பு மூல்ம் Y குரோமசோம் உள்ளதா
என சோதிக்கப்பட்டது.
ஆயினும் மீண்டும் 1996 ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் மறுபடியும் 'பக்கல் ஸ்மியர்' நடத்தப் பட்டது.
ஆண்களின் கள்ளத்தனத்தால்,இந்நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க,தொடர்ந்த கடுமையான பயிற்சிகள் மூலமாகவோ அல்லது பிறவிக்கோளாறு காரணமாகவோ மரபணு குறைபாடு கொண்டவ்ர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதும்,பதக்கங்கள் ப்றிக்கப் படுவதும் எந்தவிதத்தில் நியாயம்.?உருவளவில் பெண்ணாகவும் மரபணு குறைபாட்டால் ஆணாகவும் கருதப்படும் அவலம் என்று மாறும் ?இதற்கு தீர்வுதான் என்ன?
உடம்பில் ஏற்படும் 'ஹார்மோன்' கோளாறுகளால் முகத்தில் முடிமுளைத்து காண்ப்படும் பெண்கள்,அதே ஹார்மோன் பிரச்சனையால் மார்பு பெருத்தும் பெண் குரல் உள்ள ஆண்கள் இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
சரி சர்வதேச அளவில் ந்டை பெறும் ஒலிம்பிக் போட்டிக்குத்தான் இந்த நெறி முறைகள் என்றால்,இரயில்வே துறையில் பணிக்கு விண்ணப்பித்த் 'இதே சாந்திக்கு' ஏன் வாய்ப்பு ம்றுக்கப் பட்டது?
ஆணாகவும் கருதாமல், பெண்ணாகவும் கருதாமல் இவர்களை என்னவென்பது?மானிடர்கள?இல்லை மாக்களா?
இப்போது புரிகிறது..மானிடராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திட வேண்டும் என்று ஏன் சொன்னார்கள் என்பது...
இப்போது அதையும் திருத்தி...மகளிராய் பிறப்பதற்கும் நல்ல மா தவம் செய்தே ஆக வேண்டும்

8 comments:

  1. நல்லப் பதிவு. அறிவியல் பின்னனியை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கின்றீர்கள்...

    ReplyDelete
  2. நல்லப் பதிவு. அறிவியல் பின்னனியை மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கின்றீர்கள்...

    ReplyDelete
  3. கெளசி,

    நல்ல கேள்வி. விடைதான் தெரியவில்லை. இந்த நேரத்தில் நோகடிக்கப்பட்ட சாந்திக்கு யார் ஆதரவு குரல் கொடுக்கிறார்கள். பாவம் அவரின் எதிர்காலத்தையே இந்த ஒரு பதக்கம் கேள்விக் குறியாக்கி விட்டது.

    நல்ல எழுதியிருக்கீங்க... keep it up!

    ReplyDelete
  4. very good - arumayaga eluthiirukinga -
    enthavagayil shanthi thappu seithar
    hormons surrappathu - namaga seya koodiyathu alla
    pin yaan intha avalam
    yaaro

    ReplyDelete
  5. நன்றாக ஆராய்ந்து எழுதி இருக்கிறீங்க.

    ReplyDelete
  6. இது சாந்திக்கு நிகழ்ந்த அநீதியாக தோன்றவில்லை. மனித குலத்திற்கு ஏற்பட்ட அநீதி.

    ஆண் பெண் பாலின பரிசோதனையானது, அந்தந்த பாலினத்தினர் மட்டுமே அந்தந்த போட்டிகளில் விளையாட உருவாக்கப்பட்டது. அப்படியிருக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த உடல்கூறின்படி ஒருவர் ஒருபாலினமாக அறியப்படும் பட்சத்தில் (சாந்தி = பெண்), அவர் அந்த பாலினம் தான். அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. இதனை உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் ஒத்துக்கொள்ளும் வகையில் அனைத்து நாடுகளும் சட்டரீதியாக அங்கீரிக்கவேண்டும்.

    திருமணமான ஒருபெண் கருமுட்டை உருவாக இயலாத பட்சத்தில் குழந்தை பெற்றெடுக்க இயலாவிடில் அவரை யாரும் நீ பெண் கிடையாது என்று கூறுவது கிடையாது. அதனை போல் ஆணையும் நீ ஆண் இல்லை என்று கூறுவது கிடையாது. இது இந்தியாவில் மட்டுமல்ல...உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது தான்.

    ஏன், சாந்தி பெண் தகுதியற்றவர் என்று கூறிய அதே கமிட்டியின் பெண் மற்றும் ஆண் உறுப்பினர்கள் குழந்தை பேற்றை பெறையலாவிடில் அவர் மாற்று பாலினத்தினர் என்றால் ஒத்துக்கொள்வார்களா?

    பெண்ணினத்தினை கேவலப்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  7. செயற்கை முறையில் பாலின மாறாட்டம் செய்து கொண்டால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவேண்டும்.இயற்கையான உடற்கூறு ,ஹார்மோன் குறைபாடுகளால் ஒரு பெண்ணை ஆண் என்று கூறத்தொடங்கினால்,நிறைய அத்தைகள் சித்தப்பாக்களாகத்தான் இருப்பார்கள்
    நன்றி நாகு சார்

    ReplyDelete
  8. dont worry she has been honoured by our chief minister.

    ReplyDelete