Monday, December 11, 2006

கனவு மெய்ப்படுமா???

பாரதியின் பிறந்தநாள் இன்று..

வருடத்தில் ஒரு முறை மட்டுமே நினைவிற்கு வரும் நாட்கள் சில..
டிசம்பர் 11 பாரதியும்
அக்டோபர் 2 காந்தியும்
நவம்பர் 14 நேருவும்
செப்டம்பர் 15 பெரியாரும்,அண்ணாவும்
வருடம் ஒருமுறை மட்டுமே நினைக்கப்படுவார்கள்.
விடுமுறைக்காக அம்பேத்கார்,காமராசர் போன்றோர் பிறந்த நாட்களும்,
சுதந்திர தினமும்,குடியரசு தினமும் நினைவு கோரப்படும்
இல்லையென்றால்,இந்த அவசர யுகத்தில் என்றோ மறந்திருப்போம்
சரித்திர பாடத்தில் பார்க்காவிட்டால்,அவர்தம் முகம் கூட நினைவிருக்காது நமக்கு...
சூப்பர் ஸ்டார்,சுப்ரீம் ஸ்டார்,இளைய தளபதி,காதல்மன்னன்,அல்டிமேட் ஸ்டார்களின் பிறந்த நாட்களை கொண்டாடவும்,கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யவே நம் மக்களுக்கு நேரம் போதவில்லை பாவம்...
இதில் பாரதி கனவு நனவாகும் என்று கனவு காண்கிறோம்....
நல்ல கூத்து போங்கள்.......

2 comments:

  1. வணக்கம் கௌசி
    அருமையா எழுதியிருக்கிங்க..
    \\சரித்திர பாடத்தில் பார்க்காவிட்டால்,அவர்தம் முகம் கூட நினைவிருக்காது நமக்கு...\\

    உண்மையான வார்த்தைகள்.

    ReplyDelete
  2. நன்றி கோபிநாத் சார்.ஒரு பாப்புலர் மனிதரின் சமீபத்திய பிற்ந்த நாள் கொண்டாட்டங்கள் எழுதத் தூண்டியது

    ReplyDelete