Sunday, April 08, 2007

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா???

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை..
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று..
இது கமல் ஒரு படத்தில் பாடும் பாடல்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது பழைய வழக்கு.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,மண்டபத்திலோ கோயிலிலோ உறுதிபடுத்தப் பட்டு நீதிமன்றங்களில் முடிவுக்கு வருகின்றன என்பது இன்றைய நடைமுறை.

முன்பெல்லாம் திருமணம் பால்யத்திலே செய்யப்பட்டு பெண்கள் வயதுக்கு வரும்வரை பிறந்த வீட்டிலிருந்துவிட்டு பூப்பெய்திய பின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.

இன்னாளில் பால்ய விவாகங்கள் இல்லையென்றாலும் , சிதம்பரத்து தீட்ஷிதர் குடும்பங்களில் சபையில் பூஜை செய்யும் தகுதி வேண்டி இன்னமும் நடைமுறையில் உள்ளது.

இப்போதெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களில் எழுதும் அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. திருமணச் சடங்குகளும் பல வழிகளில் முற்போக்குச் சிந்தனையுடன் மாற்றம் கண்டிருக்கின்றன.

முன்பெல்லாம் பெற்றவர் நிச்சயித்து பெரும்பாலும் அத்தை,மாமன்வழி உறவுகளிலேயே திருமணம் முடிப்பர்.பெண்கள் திருமணம்வரை மாப்பிள்ளை முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.என் உறவுக்கார பாட்டியைப் பற்றி கிண்டலாகச் சொல்வார்கள்,'பாட்டி தாத்தா முகத்தக் கூட நேரா பார்க்கமாட்டாள் ஆனாலும் பத்து புள்ளை பெற்றுவிட்டாள்' என்று.

அதற்குப் பிறகு காதல் திருமணங்கள் பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியபோதும் பரவலாக வரவேற்கப்பட்டே வந்திருக்கிறது.காதலில்தான் இப்போது எத்தனைவகை.
பார்த்த காதல்,பார்க்காத காதல் ,கேட்ட காதல்,கேட்காத காதல் ,போன் காதல்,இண்டெர்நெட் காதல் என்று பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.

நிச்சயிக்கப்பட்டதோ அல்லது காதல்வகைப் பட்டதோ
அந்த திருமண முறைகளில் எத்துணை முன்னேற்றம்.

பத்து நாள் நடக்கும் கல்யாண கலாட்டக்கள் இப்போது அரிது.எழுத்தாளர் சாவியின்'வாஷிங்டனில் திருமணம்' படித்தவர்கள் அதன் அருமை பெருமைகளை அறிவர்.
இப்போது இரண்டே நாள். முதல்நாள் ரிசப்ஷன் மறுநாள் கல்யாணம் மூன்றாம் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் அமெரிக்காவில் என்றாகிவிட்டது.

சாத்திர சம்பிரதாயங்களோடு செய்யப்படும் திருமணங்கள்

சீர்திருத்த முறைப்படி மந்திரம் ஓதாமல் பெரியவர்கள் ஆசியுடன் செய்யப்படும் திருமணங்கள்

வாழ்க்கைத்துணை ஒப்பந்த என்ற முறைப்படி மணமக்கள் திருமண உறுதிமொழி எடுத்து செய்யப்படும் தமிழர் திருமணமுறைகள்

இரண்டே இரண்டு சாட்சிக் கையெழுத்துக்களுடன் நடத்தப்படும் பதிவுத் திருமணங்கள்

இப்போது புதிதாக இன்னொரு புரட்சியாக வந்திருக்கும் 'டைனமிக்'திருமணச் சடங்குகள் [மாப்பிள்ளை வீட்டார்,மணப்பெண் வீட்டார் அனைவரும் வயது வித்தியாசமின்றி கட்டி அணைத்து உறவு பாராட்டுவதுதான் 'டைனமிக்கின் சிறப்பம்சம்']

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல இன்னொரு புதிய திருமணக் கலாச்சாரம்
ஆரம்பித்திருக்கிறது.

அதுதான்'லிவிங் டுகெதர்' முறை.

திருமணம் செய்யாமலே ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழும் முறை.ஒரு வயது வந்த பெண் ஆடவருடன் பேசினாலே கதைகட்ட காத்திருக்கும் இந்த சமுதாயத்தில் 'லிவிங் டுகெதர்' என்பதற்கு மிகுந்த மனத்திண்மை வேண்டும்.மேல் நாடுகளில் இது சர்வசாதாரணமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் இது இன்னமும் ஏற்புடையதல்ல.

இருப்பினும் அங்கொன்று இங்கொன்றென சிலர் அவ்வாறு வாழ்கின்றனர்.சமீப காலத்தில் ஒரு சின்னத்திரை ஜோடி [ராஜ் கமல்-பூஜா] இது பற்றி பேட்டியும் கொடுத்திருந்தனர்.

அனைவருக்கும் பரிச்சயமான இன்னொரு மூத்த கலையுலக ஜோடி
கமல்-கௌதமி.இருவரும் இருவரின் பிள்ளைகளோடும் ஒன்றாய் வாழ்வதைப் பார்க்கும்பொது எப்போதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

'உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும்
நம் பிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'

திருமண பந்தம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதல்ல பிரச்சினை.நிச்சயிக்கப்பட்ட பந்தமோ
காதல் திருமணமோ,தாலிகட்டாத சீர்திருத்த கல்யாணமோ அல்லது ல்விங் டுகெதர் முறையோ எதுவாயினும் தம்பதியர் எவ்வாறு வாழ்கின்றனர்.தம் மணவாழ்வில் திருப்தியடைகின்றனரா?கருத்தொருமித்து அனுசரித்துப் போகின்றனரா
என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
எத்தனைச் சீக்கிரம் ஒரு பந்தம் உருவாகிறதோ
அதே வேகத்தில் முறிவும் ஏற்பட்டுவிடுகிறது.

காதல் திருமணம் என்றால் அப்படித்தான் என்றும்,இல்லை நிச்சயிக்கப் பட்டதில் புரிதல் இருக்காது அதுதான் காரணம் என்றும் பட்டிமன்ற விவாதத்திற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கலாம் .ஆனால் பிரிவதற்காகவா ஒரு பந்தம்?

சீதா,நளினி சரிதா,பிரசாந்த்,சொர்ணமால்யா என்று கலைத்துறையினர் மட்டுமல்ல சாதாரண நடுத்தரவர்க்கமும் குடும்பநல கோர்ட் ஏறிக் கொண்டுதானிருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு?பலமுறை யோசித்து ஒருவர் குணம் மற்றவருக்கு உடன்பாடானதா என்று அறிந்து திருமணபந்தம் ஏற்படவேண்டும்.அதற்காக நமக்கு ,நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத லிவிங் டூகெதர் முறை சரியென்று சொல்லவில்லை.தம்பதியர் ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்து மதித்து நடந்தாலே போதும்

'ஒத்த கருத்துடையவராக இல்லாத போதும்
ஒத்துப் போகும் தன்மை இருக்க வேண்டும்'

அப்போதுதான் திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.

14 comments:

  1. புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்தாலே பிரச்சினைகள் பெரிதாகாது.நல்ல பதிவு.

    லலிதா

    ReplyDelete
  2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
    பண்பும் பயனும் அது!
    -குறள்

    ReplyDelete
  3. 'உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும்
    நம் பிள்ளைகளோடு
    விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'

    Meera ( or Mehta) wrote in the 80's the above lines in appreciation of those marriages - widow / divorcee - wherein both the partners would be having kids, and those marriages which would be breaking the social taboos.

    This statement had not been written for living together couples - certainly not for Kamal - Kautami.

    Living together needs high levels of moral commitments - not only from the individuals but also from the community which would never be available in India at any point of time.

    Moreover Living together needs legislative support. At present, as per Indian Law, the living together arrangement is illegal - and if some one prefers to make a complaint - both of them would go behind the bars. They cannot claim - that we both are major and hence living together. The law would not simply allow this.

    And since the law would not allow such kind of living in's, the loser in this arrangement would be only the women. In the case of Kautami - the arrangement could better be discribed as "Living Under Protection" - that's it. In the film industry the equation is always different - A single women would not be let to live alone safely - there would be so much of pulls from so many quarters and ultimately they need to choose one male as a protector to stave off the unwanted pulls.

    If the women involved really believe that she could survive a failure in this arrangement, can try - but still needs support from some one in the soceity who would not prey on her on failure.

    Possible?

    ReplyDelete
  4. thanks for your visit 'nanban'
    my article doesnt mean the cineacters only.i happened to hear about an ordinary middle aged girl who has chosen this 'living together' option with a man without the knowledge of her partents.they found out through a detective agency till then they thought she might have been run away with someone.after caught hold of her she told that she could be more safe in this agreement rather than to get married with a person who may torture her for dowry and all in future. i was really astonished to know the mentallity of a poor educated girl to chose this way. but according to my point of view life is not just a contract to sign and cancel whenever we need to have or to break.it may be ideal to some extent if there is no sexual committment.in eithercase as you mentioned women are the only sufferer.

    ReplyDelete
  5. thanks for comment sibi. and lalitha

    ReplyDelete
  6. //நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத லிவிங் டூகெதர் முறை சரியென்று சொல்லவில்லை.தம்பதியர் ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்து மதித்து நடந்தாலே போதும்//

    சரியாகச் சொன்னீர்கள். மிக நல்ல அலசல். மிக நல்ல பதிவு.

    எனக்கென்னமோ அடுத்த தலை முறை எதிர்கொள்ளவிருக்கும் முக்கிய பிரச்சினைகளில் "லிவிங் டு கெதரும்" ஒன்றாக இருக்கும் என்றே தோணுகிறது.

    ReplyDelete
  7. நம் நாட்டில் திருமணம், இரு குடும்பங்களையும் சார்ந்த வாழ்க்கையை கொண்டாடும் தருணங்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல, contract system போல் சிலர் எண்ணுவது கவலைக்குறியதே!

    /'ஒத்த கருத்துடையவராக இல்லாத போதும்
    ஒத்துப் போகும் தன்மை இருக்க வேண்டும்'/
    யார் முதல் என்பதுதானே பிரச்சனையின் ஆரம்பமே?

    /கௌசி.. தம்பதியர் ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்து மதித்து நடந்தாலே போதும்/
    /லலிதா ..புரிதலும் விட்டுக்கொடுத்தலும் இருந்தாலே பிரச்சினைகள் பெரிதாகாது./
    /நாமக்கல் சிபி .....
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
    பண்பும் பயனும் அது!
    -குறள்
    /
    ஒத்த கருத்துக்கள்!

    ReplyDelete
  8. // my article doesnt mean the cineacters only. //

    நான் குறிப்பிட்டதும் நடிக-நடிகைகளின் வாழ்க்கை முறையை அல்ல. அவர்கள் என்றுமே, சராசரி மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியாது.

    இந்த Living in முறை சில மேல்நாடுகளில் பிரபலமாக உள்ளது. காரணம் - அங்கு ஒரு Divorce வாங்குவதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும். மேலும், கடின உழைப்பில் சம்பாத்தித்தை சுலபமாக இழக்க நேரிடும். இந்த சிரமங்களை எல்லாம் கடந்தும், இயன்ற வரை நேசத்துடன் வாழ தேர்ந்தெடுக்கப்படும் முறை தான் இந்த Living in. இது ஒரு திருமண முறை அல்ல. மாறாக இது ஒரு வாழும் முறை தான்.

    நண்பர்களாகவே வாழக்கூடிய சாத்தியதை நிறைந்த வாழ்க்கை தான்.

    ஆனால், சமூக அமைப்பும் இதற்கு சாதகமான சூழலைக் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். குறைந்த பட்சம், இத்தகைய இணைகளுக்கு ஒரு வீடு கொடுத்து உதவ இந்த சமுதாயம் முன்வருமா?

    சமூக அமைப்பில் மாற்றத்தைத் தோற்றுவிக்க முனையாமல், முடியாமல், என்னளவில், மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுவேன் என்பது தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். இதில் வெற்றிக்கு சாத்தியதை உண்டென்றால், அது இருவருமே பொருளாதார ரீதியாக மற்றவரை சாராதவராக இருத்தலும் வேண்டும்.

    எல்லாமே - ஒரு ஒப்பந்த முறையில் நடக்க இயலாது தான். திருமணத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் - ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் என்பது தான். ஆனால், இந்த மதிப்பும் அன்பும் சில உத்தரவாதங்களின் மேல் உறுதிப்படுத்தப்படவில்லையென்றால், வெற்றிக்கு வழி இருக்குமா என்பதும் சந்தேகமே!

    நன்றி.

    (நேற்று இகலப்பை படுத்திய பாட்டில் தமிழில் எழுத முடியாமல் போயிற்று. மன்னிக்கவும். அதனால், இன்று மீண்டும் தமிழில் எழுதி விட்டேன்...)

    ReplyDelete
  9. நன்றி நண்பன் சார். உங்க ஈ கலப்பை படுத்தியதோ இல்லையோ என் இங்கிலீஷ் படுத்திய பாட்டில் தமிழுக்கு மாறிவிட்டீர்களா?
    நீங்கள் சொல்வதுபோல் திருமணம் என்ற பெயர்தான் இல்லையே தவிர 'சேர்ந்து வாழ்தலும்' ஒருவித திருமணம் மாதிரிதான்.பெயர் எதுவானால் என்ன எப்போது ஒரு ஆனும் பெண்ணும் சேர்ந்து வாழ நினைக்கிறார்களோ [நட்பு ரீதியாகவோ அல்லது உடல் அளவிலோ]அந்த பந்தம்தான் நம்மால் திருமணம் எனப்பட்டு பலர் அறிய நடத்தப்படுகிறது.லிவிங் டுகெதர் முறையில் சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே போதும்.
    வாழ்க்கைத்துணை என்பதன் பொருளே வாழ்வின் எல்லா கால கட்டத்திலும் துணையாய் வருவதுதான்.லிவிங் டு கெதர் முறை ஜஸ்ட் ஒரு ஒப்பந்தம் போல.பிடித்தால் இரு இல்லை போய்க்கொண்டேயிரு தான்.
    என்னுடைய கருத்து ஒரு ஆணும் பெண்ணும் எப்படி சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதல்ல.எத்தனை வெற்றிகரமாக அதை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான். அப்போதுதான் வாழ்வு உண்மையான சொர்க்கம் என்றாகும்.நன்றி

    ReplyDelete
  10. நன்றி தென்றல்.யார் முதலில் என்ற பிரச்சினை எப்போது வருகிறது.ஆணாதிக்கம் தலை தூக்கும் போது தானே.

    ReplyDelete
  11. நந்தா அடுத்த தலைமுறையில்லை நம் காலத்திலேயே தொடங்கியாகி விட்டது.மேல்தட்டு பெண் இல்லை ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண் இந்தமுறையில் வாழத்தொடங்கியிருக்கிறாள்..

    ReplyDelete
  12. கல்யானமே வேஸ்ட்டு. இதில சொர்க்கம், நரகம் என போட்டு குழப்பிக்காட்டா நல்லது. ஒருத்திக்கு ஒருவன் என்ற இந்தியனும் சொர்க்கத்திலதான் என்கிறான். மாறி மாறி டாபாய்க்கிற வெள்ளையனும்
    சொர்க்கத்தில என்றால் தலையை எங்கே போய் முட்டுறது?
    எதுவுமே கெடையாது. எல்லாமே ஹர்மோன் பண்ணுற கண்கட்டி வித்தை.

    புரிஞ்சா சரி.

    புள்ளிராஜா

    ReplyDelete
  13. /..... ஆணாதிக்கம் தலை தூக்கும் போது தானே./
    கௌசி,
    ... இல்லை என்பது என் எண்ணம். எல்லாவற்றிகும் 'ஆணாதிக்கம்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சில உதாரணங்கள் சொல்லமுடியும். நேரம் கிடைத்தால், பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  14. //நன்றி நண்பன் சார்.//

    தயவு செய்து சார் என்ற விளியைத் தவிர்த்துக் கொள்கிறீர்களா?

    இயலவில்லையென்றால், வாசிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

    நன்றி.

    நண்பன்

    ReplyDelete