Saturday, January 06, 2007

பால் அருந்தும் அன்னங்கள்

தமிழ்மணத்தில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது மனதில் தோன்றியது இந்தப் பதிவுக்கான கரு.
ஒரு ஊரில் தலை சிறந்த ஒரு ஓவியர் இருந்தாராம்.
அவருடைய ஓவியங்கள் பலராலும் இரசிக்கப்பட்டு வந்தன.
இருந்தும் அந்த ஓவியருக்கு தன் ஓவியங்களை எந்த அளவிற்கு மக்கள் இரசிக்கிறார்கள் என அறியும் ஆசை வந்தது.
தன்னுடைய மிகச் சிறப்பான ஓவியம் ஒன்றை நகரின் முக்கிய வீதியில் வைத்து அதன் அருகில்
"இந்த ஓவியத்தில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் கருதும் பகுதியை பச்சை வண்ணத்தின் மூலம் குறிப்பிடவும்"
என்று ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார்.
மறுநாள் ஓவியர் கடை வீதிக்கு வந்து பார்த்தபோது,ஓவியம் முழுவதும் பச்சை வண்ணமயமாக காணப்பட்டது.
சந்தோஷமடைந்தாலும்,ஓவியருக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை நன்றாக இல்லாத பகுதியை மட்டும் குறிப்பிட சொல்லியிருக்க வேண்டுமோயென்று.
மறுபடியும் அதே ஓவியத்தின் மற்றொரு பிரதியை அங்கு வைத்து,நன்றாக இல்லாத பகுதியை சிவப்பு வண்ணத்தில் குறிக்கும்படி ஒரு போர்டும் வைத்தார்.
மறுதினம் பார்க்கையில் முன்பு போலவே ஓவியம் முழுதும் சிவப்பு மையினால் மெழுகப் பட்டிருந்தது.
பிறகுதான் ஓவியர் உணர்ந்தார் மனிதர்களுடைய பார்வைகளும் கோணமும் இரசனையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதை.

இதைப் போலத்தான் இருக்கிறது தமிழ்மணப் பதிவுகளும் ,இரசனையும்.
இலக்கியம்,தமிழ் ,ஆன்மிகம்,ஈழம்,பெரியாரிஸம்,பார்ப்பனீயம்சினிமா,நகைச்சுவை கணிணி தொழில்நுட்பம்,சமையல்,அனுபங்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் பதியப்படுகின்றன.
பிடித்தவர்கள் பிடித்ததைப் படிக்கவோ பின்னூட்டம் இடவோ செய்யலாம்.
பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம்.
ஆனால் சில பதிவுகளில் ஆபாசமான்,தரக்குறைவான மூன்றாந்தர பின்னூட்டங்கள் வருகிறது.
குறைந்தபட்சம் பதிவர்களாவது அதை நீக்கி விடலாம்.அவர்களும் செய்வதில்லை ஏனோ?
இதை எழுதவோ,விமர்சிக்கவோ கூட எனக்கு அதிகாரம் இல்லைதான் ஏனெனில் அது அது அவரவர் விருப்பம்.
இருந்தாலும் மனதில் பட்டதால் சொல்கிறேன்
பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டுமே பருகுமாம் அன்னப் பறவை. அதுபோல எவ்வளவோ பதிவுகள் தினமும் பதிவிடப் படுகிறது.நமக்கு பிடித்ததை உடன்பாடானதை படிக்கலாம்.
மாறுபட்ட கருத்து இருந்தால் விமர்சிக்கலாம்,ஆனால் வரைமுறை மீறவேண்டாம் என்பது என் சொந்தக் கருத்து
[இதற்கு எத்தனை வசவு வருமோ]
அன்னியனாய்...தண்டிக்காமல் அன்னப் பறவையாய் இருப்போம்[இது சமுதயத்திற்கு அல்ல.தமிழ்பதிவுகளுக்கு மட்டுமே]

9 comments:

  1. கௌசி!
    உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதை ஏற்ரும் கொள்கிறேன். பதிவுகளில் கும்மியடிப்புக் கூடத்தான் .நிற்க எனக்கு ஒரு சந்தேகம் கலந்த ஆர்வம் ;நீர் கலந்து வைத்தால் அன்னம் பாலை மாத்திரம் பிரித்துக் குடிப்பதை நீங்கள் கண்டுள்ளீர்களா? அல்லது இப்படி ஒரு சொல்வழக்கு உள்ளதே!எனச் சிலர் போல் நீங்களும் உபயோகிக்கிறீர்களா???தயவு செய்து கூறவும். யாராவது இதை அன்னத்திடம் முயன்று பார்த்தவர்கள் இருந்தால் என் சந்தேகம் தீர்க்கவும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள்!
    இதுதான் சமுதாய முன்னேற்றம் என்பது!

    ReplyDelete
  3. நன்றி யோகன் சார்
    அன்னப்பறவையே நான் டி.வியிலும்,மிருகக் காட்சி சாலையிலும் தான் கண்டிருக்கிறேன்.ஹாஹா..
    எல்லாம் சொல்வழக்குத்தான்.பொருத்தமாகத் தோன்றும்போது பயன்படுத்திக் கொள்வதுதான்.ஒரு ஒப்புவமைதானே.காணாத ஒன்றை உவமை சொல்வதால் என் கருத்து பொய்யாகுமோ.

    ReplyDelete
  4. நன்றி ஜீவா.உண்மையிலேயே என் மனம் வருந்திதான் இந்தப் பதிவு எழுதினேன்.சில பதிவுகளில் காணநேர்ந்த அருவெறுப்பான வசவுகள்,காழ்ப்புணர்ச்சி,குரோதமான வார்த்தைகள்..ஏன்?ஏன்?முகம்தெரியாதவருடன் ஏன் பகைமை பாராட்ட வேண்டும்?

    ReplyDelete
  5. well said kousi

    ReplyDelete
  6. //முகம்தெரியாதவருடன் ஏன் பகைமை பாராட்ட வேண்டும்?//

    முகம் தெரிந்தாலும் பகைமை ஏன் பாராட்டவேண்டும்? எதிர் கருத்துச் சொல்வதாலேயே பகைமை என்பது கூம்பிய மனத்தாலேயே!

    வெளிப்படுத்தும் எதிர்கருத்தில் நாகரீகம், பண்பு என்பது சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
  7. நன்றிஹரிஹரன் சார்.மொத்தமாக யாரும் யாரையும் பகைமை பாராட்டாத உலகம் சாத்தியமா?என்னால் முடியுமா?உங்களால் முடியுமா?மனிதர்கள் உணர்ச்ச்சிகளின் கலவைதானே?
    குறைந்தபட்சம் வலைப்பதிவுகளில் மட்டுமாவது நம் கோப தாபம் காட்ட வேண்டாமே என்பது என் ஆசை.
    'ரௌத்திரம் பழகு' என்ற மீசைக்காரரின் வாதத்தை வலைப்பூவிலா காட்டவேண்டும் ?

    ReplyDelete
  8. தமிழ்மணத்திற்கு புதிய வரவு என்றாலும் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    ReplyDelete
  9. //முகம்தெரியாதவருடன் ஏன் பகைமை பாராட்ட வேண்டும்?//

    வழிமொழிகிறேன்:-)

    ReplyDelete