Wednesday, March 07, 2007

மகளிர் தினம்..ஒரு கண்ணோட்டம்

நாளை மார்ச் 8 மகளிர் தினம்.
வருடத்தில் 365 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் மகளிர்க்கானதா?
மாட்டுப் பொங்கலுக்கும் மகளிர் தினத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
வருடம் முழுவதும் வண்டியிழுத்து,ஏர் ஓட்டி வேலை செய்தாலும் ,வருடத்தில் ஒரு நாள் குளிப்பாட்டி மாலையிட்டு கொம்பு சீவி அலங்கரிக்கப்படும் மாட்டுக்கு மாட்டுப் பொங்கல் மட்டும் விசேஷமானது.மகளிர் தினமும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.
வருடத்தில் ஒரு நாள் 'பிறந்த நாள் ' போல என வாதிடுவோரிடம் கேட்கிறேன் ஆடவர்தினம் என்று ஏதும் உண்டா?
மகளிர்க் கெதிரான வன்முறைகளும்,பாலியல் பலாத்காரங்களும் தொடரும் வரை உண்மையான பெண்ணூரிமையும்,சுதந்திரமும் கிடைக்கும் வரை மகளிர் தினம் என்பது பெயரளவில் மட்டுமே.அது இன்னுமொரு அட்ச்ய திரிதியைப் போல் வாங்கி மகிழ மட்டுமே.
'ஓரு பெண் என்று நள்ளிரவில் தனியாகச் சுதந்திரமாக வெளியே சொல்ல முடியுமோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் பெற்றதாகப் பொருள்' என்று மகாத்மா சொன்னது இன்னும் கனவாகவே உள்ளது.

ஒரு ஆடவன் வளர்ந்து ஆளாகி தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை தேடும் கட்டத்தில் தன்னை நேசிக்கக் கூடிய தன்னோடு தோள் சேர்ந்து வாழக் கூடிய துணையாகத் தேடாமல் தன்னை விட வசதியான ,நிறைய கொண்டுவரக்கூடிய பெண்ணா என்றுதானே பார்க்கிறான்.
அப்படியே வந்தாலும் தனக்கு அடங்கி நடக்ககூடிய ,தனக்கு வேண்டிய வசதிகளை தன் பிறந்தவீட்டிலிருந்து மேலும் மேலும் பெற்றுத் தரக் கூடியவளாக இருக்கவே விரும்புகிறான்.

இந்த நிலை அடிமட்ட வர்க்கத்தில் மட்டுமில்லை.ஒரு பல்கலைகழகத் துணைவேந்தர் முதல் பிரபலமான நடிகர் குடும்பம்வரை வியாபித்துக் காணப்படுகிறது.

நான் அப்படிப்பட்டவன் இல்லை எனக்கும் பெண் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு அடுத்தவர் தயவை எதிர்பார்க்க மாட்டேன் என்று சொல்லக் கூடிய பலரும் தன்னைச் சார்ந்த பெண் தனக்குக் கட்டுப் பட்டிருக்கவே நினைப்பர்.

ஒரு பெண்ணின் உண்மையான சுதந்திரம் என்பது அவளின் கருத்துச் சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது.'பொட்டச்சிக்கு என்ன தெரியும் வாயை மூடிக் கொண்டு பேசாம் இரு' எனும் ஆடவன் குரல் ஒலிக்கும்வரை பெண்ணுரிமை ஏட்டுச் சுரைக்காய்தான்.

பெண்ணுரிமை என்று முழங்குவோர் முதலில் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்.ஒரு ஆணுக்கு எத்துணை உரிமையுண்டோ அத்துணையும் பெண்ணுக்கும் கிடைக்கட்டும்.ஒவ்வொரு குடும்பமும் திருந்தினாலே மொத்தமாக சமுதாய மற்றம் ஏற்படும்.

''அவள் அழகாயில்லாததால் என் தங்கையானாள்' என்று கவிதை எழுதினால் ரசிக்கும் ஆடவர் போக்கு மாறும்வரை,தன் துணையைத்தவிர சக பெண்டிரை தாயாய்,சகோதரியாய் மகளாய்ப் பார்க்கும் வரை மகளிர்தினம் எந்த சமுதாயப் புரட்சியையும் ஏற்படுத்திவிட முடியாது.
பெண்ணென்ற அலட்சியப் போக்கும்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனோபாவமும் மாறி, பெண்களுக்கெதிரான சாதீய,மத,சமுதாய்க் கொடுமைகளும் வன்முறைகளும் களையப்படும்வரை மகளிர் தினம் என்பது பத்தோடு பதின்னொன்றான ஒரு கலாச்சார கொண்டாட்டமே அல்லாது உண்மையான பெண்ணுரிமைக்கோ சமத்துவத்திற்கோ அடிகோலும் வித்தாக முடியாது.

5 comments:

  1. All are very old views.... Answered at many places.... Think something fresh..

    ReplyDelete
  2. அனானி நண்பரே ஓல்டு வியூவாகவே இருக்கட்டும்.நீங்கள் என்ன புதுமை வேண்டும் என்கிறீர்கள்.தாராளமாகச் சொல்லலாம்.
    மேலை நாட்டுக் கலாச்சாரம் வேண்டும் என்கிறீர்களா

    ReplyDelete
  3. Same Anony - Selva - says...!

    //வருடத்தில் 365 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் மகளிர்க்கானதா?
    மாட்டுப் பொங்கலுக்கும் மகளிர் தினத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது//

    Many business and publicity ideas behind this celebration. If you are gaining from them then follow it, else let s see our business. No harm . We can't change all the fools.

    //மகளிர்க் கெதிரான வன்முறைகளும்,பாலியல் பலாத்காரங்களும் தொடரும் வரை உண்மையான பெண்ணூரிமையும்,சுதந்திரமும் கிடைக்கும் வரை // Both men and women and this society all are collectively resopnsible for this. In a society where sex is a taboo, and sexual poverty is very common .. violence from the stronger sex is unavoidable despite the civilisazational growth,education etc. Fundamentally manythings are wrong here.

    //தன்னோடு தோள் சேர்ந்து வாழக் கூடிய துணையாகத் தேடாமல் தன்னை விட வசதியான ,நிறைய கொண்டுவரக்கூடிய பெண்ணா என்றுதானே பார்க்கிறான்.
    அப்படியே வந்தாலும் தனக்கு அடங்கி நடக்ககூடிய ,தனக்கு வேண்டிய வசதிகளை தன் பிறந்தவீட்டிலிருந்து மேலும் மேலும் பெற்றுத் தரக் கூடியவளாக இருக்கவே விரும்புகிறான்//

    Not everyone madam. I agree only few men don t expect dowry. But women who do not expect dowry from their daughter inlaws are many many times lesser than that. No point in blaming only men in this point.

    //ஒரு பெண்ணின் உண்மையான சுதந்திரம் என்பது அவளின் கருத்துச் சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது// Very good point. Here many girls think freedom entirely lies in dressing and disobedience.

    // தன் துணையைத்தவிர சக பெண்டிரை தாயாய்,சகோதரியாய் மகளாய்ப் பார்க்கும் வரை // Never possible in any society. Nothing to do with freedom of women.

    Same Anony - Selva.

    ReplyDelete
  4. நன்றி செல்வா ஒரு வேளை தமிழ்மண பான்ட் இல்லாததால் அனானியாய் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் போலும்.நல்லது.
    என்ன சொல்லவருகிறீர்கள் கொஞ்சம் குழப்பம்.என் கருத்தைச் சொல்கிறேன்.
    1.மகளிர் தினம் என்பது இன்னொரு அட்சய திருதியை என்றதன் பொருள் உங்களுக்கு விளங்கியிருக்குமானால் நம் இருவர்ர் கருத்தும் ஒன்றே.
    2. செx பற்றிச் சொல்லும் போது இரு கை ஓசை என்று ஏன் சொல்கிறீர்.நான் சொல்ல வந்தது வீருப்பத்திற்கு எதிரான பாலியல் பலாத்காரம். வன்மையான பாலினம் வெல்லும் என்ற உங்கள் கூற்று சரியானது எனினும் அப்படிப் பட்டவர்களை சட்டத்தின் முன் நின்று போராடி தண்டனைப் பெற்றுத்தந்த சிதம்பரத்து'பத்மினி' விழுப்புரம் 'அமுதா' இப்படி இன்னும் பல பலர்.இதில் கொடுமை இந்த குற்றங்களின் காரணகர்த்தாக்கள் காவல்துறையினர்.
    3.வரதட்சணை பற்றிச் சொல்லும் போது நான் இதில் விதி விலக்கான ஆண்கள் உண்டு என்றே சொல்லியிருக்கிறேன்.அவர்களும் மற்ற எல்லா விதத்திலும் [வரதட்சணை தவிர்த்து] தன் துணைக்கு முழுச் சுதந்திரம் அளிப்பார்களா என்பதே என் கேள்வி.
    4.கருத்துச் சுதந்திரத்தில் என்னோடு ஒத்துப் போகிறீர் .ஆனால் அதுதான் பெண்ணுரிமையின் ஆணிவேர் என்பதை எத்தனை பேர் ஏற்பார்கள்?
    5.தன் மனை தவிர மற்றவரை தப்பாகப்பார்க்காமல் ஒரு சமுதாய அமைப்பு சாத்தியமில்லை என்கிறீர்.ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் கட்டுப்பாடு வன்முறைகளின் சதவீதத்தைக் குறைக்கும்.தானாக திருந்தாதவர்கள் சட்டத்திற்கு பதில் சொல்லவேண்டிவரும்.
    முடிவாக, அய்யோ பாவம் பெண்ணுரிமை என்கிறீகளே உங்கள் குருத்து மாறும் காலம் இது.படிப்பறிவில்லாத 'சின்னப் பொண்ணுகளும்' போராடி ஜெயிக்கக் கிளம்பிவிட்டோம்.மாற்றம் என்பது மெதுவாகத்தான் நிகழும்.பொறுத்திருங்கள்.

    ReplyDelete
  5. அனானி செல்வா வுக்கு
    இது நடக்காத காரியம் என்பதைவிட என்னளவில் இதைச் செய்வேன் என்று 'பிள்ளையார் சுழி' போடுங்கள்.
    இப்படி ஒவ்வொருவராய் உணர்ந்து மாறினால் நிச்சயம் புதுயுகம் மலரும் சமத்துவ மலர்களுடன்.

    ReplyDelete