Thursday, March 08, 2007

டெஸ்ட் டியூப் பேபிகள்

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இந்த நாளில் மகளிர் பிரச்சனைகள் அதற்கான பதிவுகள் என்பதே என் விருப்பம்.
பெண்மையின் தவம் தாய்மை என்றால்
அந்த தவத்தின் வரம் தான் மக்கட் பேறு.
எதனையோப் பேருக்கு அந்த இயற்கையின் ஆசீர்வாதம் கிடைக்காமலேப் போகிறது.
இந்த இடத்தில் என் மனம் கவர்ந்த ஒரு பழையத் திரைப் பாடலைப் பற்றிச் சொல்ல ஆசைப் படுகிறேன்.மேலோட்டமாகப் பார்க்கும் போது கொஞ்சமே விரசமாகத் தெரிந்தாலும் கவியரசரின் அந்த கவிதை வரிகளிலும் அர்த்தத்திலும் மனம் மயங்கிப் போகிறது.
'பார் மகளே பார்'என்ற படத்தில் சிவாஜியும்,சௌகாரும் பாடும் பாடல்.அவ்விருவரின் அழகும் காட்சி அமைப்பும் பாடலுக்கு மேலும் அழகூட்டும்
நீரோடும் வைகையிலே.........எனத் தொடங்கும் பாடலின் வரிகள்
''நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
வாரிரோ ஆரிரோ ஆராரோ''
தாம்பத்யத்தின் இந்த தவமும் வரமும் கிடைக்காத எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
சமுதாயத்தின் முன் இவர்களே குற்றவாளிகளாகவும் முன்னிறுத்தப் படுகின்றனர்.பெண்ணுரிமையின் முதல் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பிக்கிறது.இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு அடிகோலும் என்பதாலேயே என்னுடைய பெண்ணுரிமைப் பதிவுகளில் இதைப் பற்றி நான் விவாதிக்கவில்லை.
இயற்கை வஞ்சித்தாலும் அறிவியல் நுட்பங்கள் இம்மாதிரி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதில் வளர்ச்சி கண்டிருக்கிறது.
'டெஸ்ட் டியூப் பேபி' எனப்படும் சோதனைக் குழாய் குழந்தைகள் ஒரு காலத்தில் ஏதோ பாவம் போலவும் ,நெறி பிறழ்தல் போலவும் கருதப் பட்டன.இன்று ஓரளவ பரவலாக அறியப்பட்ட போதும்,இன்னமும் முழுமையாக அதைப் பற்றிய 'தெளிவு' படித்தவர்கள் மத்தியிலேயே காணப்படவில்லை.

பிறவி அல்லது பரம்பரைக் குறைபாடுகளோ அல்லது நோய்த்தாக்குதலினாலோ
இயற்கையாக 'சூல்' கொள்ள முடியாத ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே அவளின் சினை முட்டையையும்[egg],அவள் கணவனின் உயிரணுவையும்[sperm] கலக்கச் செது உருவாகும் 'கருமுட்டை'[fertilised egg or zygote]யை மீண்டும் அவளின் கருவகத்தில் செலுத்தி வளரச் செய்து பிறக்கும் குழந்தைதான் 'டெஸ்ட் டியூப் பேபி'
.

பலர் இன்னமும் ஏதொ முழுக்குழந்தையுமே 10 மாததிற்கு ஒரு பெரிய சோதனைக் குழாயிலேயே வளரும் என்று கூட நினைக்கின்றனர்.
கரு உருவாகும் சூழ்நிலையில் இல்லாத 'சூலகங்கள்'[UTERES] ஒரு முறை கருமுட்டையை வெளியே உருவாக்கி உள் சேர்த்த பிறகு அதை 10 மாதத்திற்கு வளர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது.இதை இயற்கையின் விந்தை என்பதா முரண்பாடு என்பதா?
உயிரணுக்களில் குறைபாடு உள்ள ஆண் அல்லது சினை முட்டை உருவாகாத பெண் இப்படி தம்பதியரில் யாருக்கேனும் நிவர்த்திக்க முடியாத குறை இருக்கும் பட்சத்திலேயே மாற்று வழியாக 'சினைமுட்டை தானம்' அல்லது 'உரிரணுக்கள்' தானம் பெறப்பட்டு இந்த சோதனக்குழாய் முறை செய்யப்படுகிறது.

எல்லா சோதனைக் குழாய் முறைகளுமே 'டோனார்' முறை இல்லை.

இப்படி 'டோனார் இடமிருந்து பெறுவதும் தம்பதியரின் சம்மதம் அறிந்து,தகுந்த டோனார் கண்டறியப் பட்டு மிகுந்த இரகசியம் காக்கப் பட்டு ,சம்மந்தப்பட்ட அனைவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது.
எனவே இது ஏதோ பாவச் செயல் போலவும் ,ஒழுக்க நெறியிலிருந்து விலகுதல் போலவும் பெண்கள் அஞ்ச வேண்டாம்.கிராமப் புறங்களில் 'நாத்து நடவு''என்பார்கள்.
ஓரிடத்தில் விளைவிக்கப் பட்ட நாத்தைப் பிடுங்கி பாத்தியில் நடுவது போலத்தான்.
இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த அறிவுத்திறனோடும் விளங்குகின்றனர் என்பது கண்கூடு.
தாய்மை அடைய முடியாமல்,சமூகத்தின் கேலிக்கும்,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வேதனைப்படும் மகளிர் விரும்பினால் இம்முறையைத் தைரியமாகத் தேர்ந்தெடுக்கலாம்.இதில் எந்த பாவமும் இல்லை.பணம் மட்டுமே இலட்சக் கணக்கில் செலவாகும்.இதன் வெற்றி வாய்ப்பு சதவீதம் 30 -40 ஆக இருந்தாலும் நம்பிக்கையொன்றோ வேண்டியது
இயற்கையின் வஞ்சனையை விஞ்ஞானத்தால் வெல்லுங்கள் தோழியரே!

[வாடகை தாய்கள் மற்றும் தத்தெடுத்தல்....பற்றி எனது அடுத்த பதிவுகளில் பார்ப்போம்]

7 comments:

  1. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி..!!!

    ReplyDelete
  2. ``சோதனைக்குழாய் கருத்தரிப்பு''(Test tube baby)பற்றி மிக எளிமையாகச் சொன்னது அழகு. அதே குழந்தைப்பேற்றின் அவலம் பற்றி என் பதிவில் சில கருத்துப் பரிமாற்றம் எழுதியுள்ளேன். வாசித்து கருத்து சொல்லுங்கள்

    ReplyDelete
  3. தாணு இன்னம் உங்கள் பதிவு வாசிக்கவில்லை. வாசித்த பிறகு என் கருத்து சொல்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி ரவி வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  5. நல்ல, எளிமையான பதிவு.

    ReplyDelete
  6. ஒரு குழந்தை படத்தை போட்டிருந்தால் இன்னும் தூக்கியிருக்கும்.
    இருந்தாலும் நல்ல தகவல்கள் உள்ளன.

    ReplyDelete
  7. வாங்க வடுவூர் குமார் இது கொஞ்சம் உணர்வுப்பூர்வமான சங்கதி என்பதால் தகவல்களை மட்டுமே தர முனைந்தேன்.

    ReplyDelete