ஒரு தொலைக்காட்சி அல்லது நேரடி நிகழ்ச்சியை கோர்வையாகவும்,சிலசமயம் கவிதை நயமாகவும் தொகுத்து வழங்குவது ஒரு தொகுப்பாளரின் வேலை.
ஆங்கிலமோ அல்லது தமிழோ அதில் நல்ல தேர்ச்சியும்,குரல்வளமும் தொகுப்பாளர்களின் முக்கிய தகுதியாகக் கருதப் படுகிறது.
ஆனால் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை பெண் தொகுப்பாளினிகளுக்கே 'மவுசு' அதிகம்.
அரைகுறையான கவர்ச்சி ஆடையில் வருவது இப்போது அடிப்படைத் தகுதியாகி விட்டது.
ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் இரண்டும் கலந்த தமிங்கலத்தில் பேசுவது,கெக்கே பிக்கே னு வார்த்தைகளுக்கு நடுவில் சிரிப்பது,அடிக்கடி விரித்துப் போடப்பட்ட தலைமுடியையோ அல்லது முன் நெற்றியில் விழும் முடியையோ தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பது,பேசத் தெரியாத மழலை போல கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது எல்லாமும் தொகுப்பாளினிகளின் அத்தியாவசிய தேவையாகும்.
தொலை பேசி வழி உரையாடல் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் அட்டகாசம் தாங்காது.வழக்கமான நெட்வொர்க் குளறுபடியும் சேர்ந்து கொள்ள அந்த முனையில் இருப்பவர் ஒன்று கேட்க இவர் ஏதாவது தன் பாட்டுக்கு சொல்ல பார்க்கும் நமக்குத் தான் பற்றிக் கொண்டுவரும்.
சில நேரம் நிகழ்ச்சிக்கு சம்மந்தமே இல்லாமல் இவங்களாகவே எதையாவது பேசி வழிந்து விட்டு,பேசவந்தவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் 'சரிங்க அடுத்த காலர் கூப்பிடுகிறார் நன்றிங்க' னு முதலாமவரை 'கட்' செய்து விடுவர்.
இப்படித்தான் ஒருமுறை ஒரு எஃப்.எம் ரேடியோவின் விருப்பப் பாடல் நிகழ்ச்சி.
ஜாக்கி கேட்கிறார்.
'ஹலோ உங்க பேரு என்ன?'
''............'
'நீங்க என்ன செய்யறீங்க?'
'சும்மாதான் மேடம் இருக்கேன்'
இவர் ஜாக்கியிடம் கேட்கிறார்'நீங்க என்ன மேடம் பண்றீங்க'
'நானும் சும்மாதான் இருக்கேன்'
போனில் பேசுசியவர் சொல்கிறார்,'அப்படினா நாம ரெண்டு பேரும் சேர்ந்து.....[என்ன சொல்ல நினைத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்].'
அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் 'வாட்ட்ட்ட்ட்ட்?' அப்படினு பெண் குரல் கொடுக்க
'ஒன்னுமில்லை மேடம் எனக்கு....அந்த பாட்டு போடுங்க'என்று ஜகா வாங்கி விட்டார்.
இன்னொருமுறை
'உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா'
'இல்லைங்க'
'எத்தனை குழந்தங்க'
'என்ன'
'ஓ சாரி திருமணம் ஆகலைன்னு சொன்னீங்க இல்லை சரியாக் கேட்கலை'
இப்படி பூசி மழுப்பும் வழிசல்கள் வேறு.
தொகுத்து வழங்குவது என்பது ஒரு கலை.
பார்க்கக்கூடிய அழகும்,குரல்வளமும் இருப்பதோடு கண்ணியமான தோற்றமும் கட்டுப்பாடான அதே நேரம் நேயர்களைக் கட்டிப் போடும் சுவாரஸ்யமும் எல்லாமும் இருந்தால்தான் ஒரு நல்ல ஜாக்கியாகவோ அல்லது தொகுப்பாளராகவோ இருக்க முடியும்.
பெப்ஸி உமாவின் பல ஆண்டுகால வெற்றிக்கு இதுவே காரணம்.
ஓரளவு அழகோடு ,நல்ல குரல் வளத்தோடு நேயர்களிடம் மிக அன்பாகவும் பாசமாகவும் அதே நேரம் கண்ணியம் மாறாமலும் பேசியதே அவரின் வெற்றிக்குக் காரணம்.
ஆரம்ப காலகட்டத்தில் ரேடியோவோ அல்லது தொலைக்காட்சியோ தொகுப்பாளினிகள் பலர் அப்படித்தான் இருந்தனர்.
ஆனால் இப்போதோ எஃப்.எம் சேனல்களும் தொலைக்காட்சி சேனல்களும் அதிகரித்து விட்ட நிலையில் அவர்களின் கூத்து தாங்க முடியவில்லை.
அரைகுறை ஆடைகளும்,ஆ..ஊ என்ற கூச்சல்களும்,பாகுபாடின்றி கட்டிப் பிடித்தல் ,இடித்தல் போன்ற சேட்டைகளுமாக ரொம்பத்தான் ரகளை கட்டுகிறார்கள்.
சுவாரஸ்யம் வேண்டுமென்பதற்காக எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம்,எப்படி வேண்டுமானாலும் மாமா,மச்சி எனப் பேசலாம் ,மேடையிலேயே கட்டிப் பிடித்து முத்தமிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நடக்கலாம் எல்லாவற்றையும் இரசிக்க ஆள் இருக்கு என்ற மனப்பாங்கு அதிகரித்து விட்டது.
சேனல்களும் போட்டியான உலகத்தில் ஆடைக் கவர்ச்சி,வார்த்தைகளில் கவர்ச்சி ,செய்கைகளில் கவர்ச்சி இருந்தால்தான் ஒப்பேற்ற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.
//ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் இரண்டும் கலந்த தமிங்கலத்தில் பேசுவது//
ReplyDeleteநீங்க பதிவில் சொல்லும் சில்மிசங்கள் எதை வேண்டுமானாலும் செய்யட்டுங்க.ஒருத்தருக்கு ஆங்கிலத்தில் மட்டும் பதில் சொல்லவும் (ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தால்) அல்லது தமிழில் மட்டும் பேசச் சொல்லுங்கள்.
ஆமா!எனக்கொரு சந்தேகம்.நாம பதிவுகள்ல இந்தக் கத்து கத்துறேமே இதெல்லாம் அவங்க கண்ணில விழுமா அல்லது நாமதான் புலம்பிகிட்டு இருக் கோமா?
//நாம பதிவுகள்ல இந்தக் கத்து கத்துறேமே இதெல்லாம் அவங்க கண்ணில விழுமா அல்லது நாமதான் புலம்பிகிட்டு இருக் கோமா?//
ReplyDeleteபுலம்பிகிட்டுதான் இருக்கோம்.யார் காதுலயும் விழாது.விழுந்தாலும் டோண்ட் கேர் தான்
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
/
ReplyDeleteகௌசி said...
புலம்பிகிட்டுதான் இருக்கோம்.யார் காதுலயும் விழாது.விழுந்தாலும் டோண்ட் கேர் தான்
/
ஊதற சங்கை ஊதி வைப்போமே
:))))