Saturday, August 16, 2008

நட்சத்திர நன்றி......[.கல்லுடன்]

சின்னச் சின்ன ஆனால் முக்கியமான வியாதிகளுக்கான தகவல்களைத் தந்திருக்கிறேன்.
இந்த வாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் மிக முக்கியமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு உடல் உபாதைக்கான குறிப்பைத் தந்து முடிக்க விரும்புகிறேன்.

அதுதான் ஸ்டோன் எனப்படும் கல் பிரச்சினை.

கல் என்றாலே அது சிறுநீர்ப்பையில் மட்டுமே உண்டாகும் என்ற பழைய கருத்து உண்டு.
மேலும் அந்தக் காலத்தில் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.அரிசியில் கல் இருந்து சரியாகக் களைந்து போடாவிட்டால் கல் உண்டாகும்.அதிலும் ஆண்களுக்குத்தான் வரும் என்று.

பின்னர்தான் தெரிந்தது கல் என்பது நம் உடம்பில் சேரும் சுண்ணாம்புச் சத்து 'கால்சியம் ஆக்ஸலேட் என்ற படிமமாகப் படிந்து அளவில் பெரிதாகிக் கொண்டே வந்து சிறிநீர்த்தாரையில் அடைப்பை ஏற்படுத்தும் போது மிகுந்த வலியைத் தரும் என்பது.

இந்தவலியானது விலாப்பகுதி அல்லது இடுப்பின் பின்புறம் துவங்கி அதிகரிக்கும்.சிலருக்கு வாந்தி ஏற்படும்.வலியின் தீவிரம் அதிகரித்தால் அடிக்கடி காய்ச்சல்கூட வரும்.சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையும் கடுமையான வலியும் உண்டாகும்.

சிறு நீரில் உள்ள யூரிக் அமிலம் கால்சியம் உப்பாக மாறி படிமமாக படிகிறது.
ஆக்ஸாலிக் அமிலம் அல்லது பொதுவாக அமிலத்தன்மை கொண்ட உணவுகள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் இந்த கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
சிறுநீரகம் மட்டுமல்லாது,பித்தபை கல்,கால்பிளாடர் எனப்படும் கணையக்கல் என பல விதம் உண்டு.
ஆரம்ப காலத்தில் வலி தெரியாது. நம் உணவில் சேரும் கால்சியத்தின் அளவு மிகும் போது உடலில் உள்ள அமிலத்தன்மையால் உப்பாகி,உப்பு படிந்து கெட்டியாகி சிறு சிறு கற்களாக மாறி நகர முடியாமல் ஓரிடத்தில் அந்த தசைகளை உராயும் போதுதான் வலி தெரியும்.
மிகச் சிறிய அளவானது என்றால் மருந்துகள் மூலம் கரைக்கப்படும்.

அதிகமாக நீர் எடுத்துக் கொள்ளாததும் இப்படி ஓரிடத்தில் உப்பு படியக் காரணம்.
எப்படி அதிகம் தண்ணீரை ஊற்றி குழாய்களில் அடைப்பு இல்லாமல் கழுவுகிறோமோ அப்படி நாம் உட்கொள்ளும் நீர் உப்பைப் படியாமல் வெளியேற்றிவிடும்.
கல்லின் அளவு பெரிதாக இருப்பின் அறுவைச் சிகைச்சை ஒன்றே வழியாகும்.

முட்டைகோஸ்,காலிபிளவர்,கொய்யா,மாதுளம் பழம் நண்டு,பால் இப்படி கால்சியம் செறிந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆரம்ப நிலை என்றால் மிகுந்த தண்ணீர்,இளநீர்,குளுக்கோஸ் முதலிய பானங்களோடு,வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம்,கொள்ளுப் பயிறின் சூப் அல்லது ரசம் நல்ல பலனளிக்கும்.

அதிகம் எழுத நேரமில்லாது போனாலும் நித்தம் ஒன்றேனும் எழுத வேண்டும் என முடிந்தவரை முயற்சித்து எழுதி விட்டேன்.
நட்சத்திர வாய்ப்பு வழங்கிய தமிழ்மணத்திற்கும்
பதிவுகளைப் படித்த நண்பர்களுக்கும் நன்றி

4 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தீர்கள்!!
    தொடரட்டும்!!

    ReplyDelete
  2. நட்சத்திரவாரத்தில் பயனுள்ள பதிவுகளாத்தான் போட்டுருந்தீங்க. படிச்சுட்டுப்போயிட்டேனே தவிர பின்னூட்டலை.

    இந்தக் கால்சியம் உடம்பிலுள்ள தசைகளில்கூட படிஞ்சுபோயிருதாம். எனக்குக் கைகளில் தோளுக்குக்கீழே படிஞ்சுருக்குன்னு எக்ஸ்ரேயில் காமிக்குது. பயங்கர வலி.

    இதுக்கு மருந்தே இல்லையாம். சின்னச் சின்ன பயிற்சிகள் மட்டுமே செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

    நல்லதாத்தான் போச்சு உங்க நட்சத்திர வாரம்.

    கல் வைச்ச பொய்ன்னு மலையாளத்திலே ஒரு சொல் உண்டு.

    உங்களுது ,'கல் வச்ச நிசம்':-))))

    ReplyDelete
  3. அன்புள்ள தோழியே,

    உங்கள் பதிப்புக்கள் கண்டேன், அருமை. நன்றாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    நீங்கள் சுஜாதாவின் பதிப்புகளை விரும்புபவர? நானும்தான். முடிந்தால் என்னோட இலக்கணம் இல்லா கவிதை நடை கிறுக்கல்களை கொஞ்சம் படித்து பார்த்து கருத்துஇடுங்களேன்..

    நன்றி

    தமிழ் உதயன்.

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல்கள்



    நன்றி.

    ReplyDelete