'எங்கிட்ட வாலாட்டினா கையைக்காலை உடைச்சிடுவேன்னு' சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம்.
ஆனால் யாரும் உடைக்காமலேகூட எலும்பு உடையும் அபாயம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?
புல் தடுக்கி விழுபவனை 'புல் தடுக்கி பயில்வான்' னு கிண்டல் செய்வோம்.
ஆனால் சும்மா லேசா அழுத்தி ஊன்றி எழுந்தாலோ,லேசா ஸ்லிப் ஆனாலோ ,மெதுவா கீழே விழுந்தாலோ கூட எலும்பு முறியும் அபாயம் உண்டு.
அந்த அளவுக்கு எலும்பு வலுவிழந்து எளிதில் உடையும் அல்லது நொறுங்கும் தன்மையைத்தான் 'ஆஸ்டோபோரிஸிஸ்,என்கிறோம்.
இது 40-50 ஐத் தாண்டியவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 100 க்கு 50 சதவீதமும் ஆண்களுக்கு கொஞ்சம் குறைவான சதவீதமும் ஏற்படக் கூடிய வியாதி.
இது ஒரு மௌன சாத்தான்.கையைக் காலை உடைத்துக் கொள்ளும் வரை வெளியே தெரியாது.
BMD எனப்படும் போன் மினரல் டெஸ்ட் மூலமே அறிய முடியும்.
போன் மினரல் என்பது வேறு ஒன்றுமில்லை முக்கியமாக கால்சியம்தான்.
உடம்பில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும் போது இந்த எலும்பு தேய்மானம் அல்லது வலுவிழத்தலும் எற்படுகிறது.
இதற்கு உணவுப் பழக்க வழக்கத்தோடு கால்சியம் சத்து செறிந்த உணவுகள் அவசியம்.அத்தோடு வைட்டமிம் D யும் தேவைப்படுகிறது.
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் இந்த ஆஸ்டியோபோரிஸிஸ் தாக்கக் காரணம் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் நின்று போதலும் ,ஹார்மோன் மாறுபாடுகளுமேயாகும்.
கருப்பையில் கோளாறு கருப்பை அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கும் ஹார்மோன் குறை பாட்டால் உடலில் கால்சியம் சத்து குறைந்து எலும்பு வலுவிழக்கிறது.
ஆண்களைப் பொறுத்தவரை புகை பிடித்தல்,முக்கியமாக மது அருந்துதல் காரணமாகிறது.
சிலருக்கு பரம்பரையாகவோ அல்லது பிறவிக் கோளாறாகவோக் கூட இருக்கலாம்.
கால்சியம் அதிகம் நிறைந்த பால்,பால் பொருட்கள்,பச்சைக்காய்கறிகள்,கீரைஆகியவை உணவில் அவசியம் தேவை. குறிப்பாக முருங்கைக்கீரை,முட்டைகோஸ்,காலிபிளவர்,கொய்யாப் பழம்,அசைவ வகையில் நண்டு,இறால் இவைகளில் மிகுந்து காணப்படுகிறது.
வைட்டமின் D யும் கால்சியத்துடன் தேவை.அது இலவசமாகவே நமக்கு சூரிய ஒளியில் கிடைக்கிறது.காலையில் ஒரு சில நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி வெய்யிலில் நின்றாலே நம் தோலானது வைட்டமின் D ஐக் கிரகித்துக் கொள்ளும்.
இத்துடன் இந்த வியாதிக்கான சரியான மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தல் நலம்.
இந்த நட்சத்திர வாரத்தில் ஏதோ பெரிய மருத்துவர் ரேஞ்சுக்கு பதிவு போட்டிருக்காங்களே ன்னு நினைக்க வேண்டாம்.
அனுபவங்களும் கேள்விப் பட்டவைகளையும் பகிர்ந்து கொள்ளும் போது,மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற எண்ணமே காரணம்.
நல்ல பதிவு...
ReplyDelete/அனுபவங்களும் கேள்விப் பட்டவைகளையும் பகிர்ந்து கொள்ளும் போது,மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற எண்ணமே காரணம்./
ReplyDeleteஅதுதானே பதிவுகளின் நோக்கமே...
பலவற்றை தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteநாற்பது வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால்,அதுவும் மெதுவாக விழுந்தே ஏற்பட்டால் "மல்டிபில் மையெலோமா"என்ற எலும்புப் புற்று நோய் இருக்கிறதா என்பதையும் சோதித்துப் பார்த்திட வேண்டும்.
ReplyDeleteஎனக்கு இப்படித்தான் கார் விபத்தில் கை ஒடிந்துபோனது. அப்போது இதை பற்றி கேள்விபட்டதில்லை. இரு ஆண்டுகளுக்கு பிறகு அப்போது வைக்கப்பட்ட மெட்டல் தகடு போனவாரம்தான் எடுத்தேன், அப்போது மருத்துவர் சொன்னதும் இந்த ஆஸ்டியோபோரஸ் பற்றித்தான். எலும்பு ரொம்ப பலவீனமா இருக்குன்னு சொன்னார். ஒருவேளை இதை பற்றி முன்னமே அறிந்திருந்தால் இது போன்று நடந்திருக்காதோ?!
ReplyDeleteஅன்புடன்,
அன்பு
நன்றி நண்பா.
ReplyDeleteகால்சியம் குறைபாட்டிற்கு நமது கல்லீரல் சரிவர வேலை செய்யாததும் ஒரு காரணம் நண்பரே. நமது கல்லீரல் சுரக்கும் பித்த நீர் தான் கால்சியத்தை கரைக்கும். அப்போது தான் நம் சிறு குடலால் அதை உரிய முடியும். இது தான் கால்சியம் குறைபாட்டிற்கு மூல காரணம். மேலும் விபரத்திற்கு எனது வலை பக்கத்தை பார்க்கவும் http://reghahealthcare.blogspot.com/2011/02/liver.html